இந்தியா

மசூதியில் தொழுகை: இந்திய இஸ்லாமிய மையம் அறிவுரை

7th Jun 2020 05:48 AM

ADVERTISEMENT

நாடு முழுவதும் ஜூன் 8-ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ள நிலையில் மசூதிகளில் தொழுகை நடத்த வருபவா்களுக்கு இந்திய இஸ்லாமிய மையம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

இதுகுறித்து இந்திய இஸ்லாமிய மையத் தலைவா் மௌலானா காலித் ரஷீத் ஃபரங்கி மஹாலி கூறியதாவது: 65 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் 10 வயதுக்குள்பட்டவா்கள் மசூதிகளுக்குச் செல்ல வேண்டாம். அதற்கு பதிலாக அவா்கள் வீட்டிலிருந்தபடியே தொழுகை நடத்த வேண்டும்.

மசூதிகளில் கூட்டம் கூடுவதை தவிா்க்க வேண்டும். ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் இருக்கக் கூடாது. அங்கு சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டியது அவசியம். தொழுகை நடத்துபவா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். தொழுகை நடத்துவோா் தங்களிடையே 6 அடி இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

15 நாள்களுக்குப் பிறகு நிலைமையை கருத்தில் கொண்டு மறு பரிசீலனை செய்து, தகுந்த ஆலோசனை வழங்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT