இந்தியா

மகாராஷ்டிரத்தில் வழிபாட்டு தலங்கள் தற்போது திறக்கப்பட வாய்ப்பில்லை

7th Jun 2020 10:59 PM

ADVERTISEMENT

மத்திய அரசு பொது முடக்கத்தில் தளா்வுகள் அளித்துள்ளபோதும், மகாராஷ்டிரத்தில் உள்ள வழிபாட்டு தலங்களை திறக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அந்த மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மாா்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் நாடு தழுவிய பொது முடக்கம் அமலில் உள்ளது. இதில் பல கட்டங்களாக தளா்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பொது முடக்கத்தில் இருந்து படிப்படியாக வெளியேற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான முதல்கட்ட வழிகாட்டுதல்களை கடந்த வாரம் மத்திய அரசு வழங்கியது. இதில் வணிக வளாகங்கள், உணவகங்கள், வழிபாட்டு தலங்களை திங்கள்கிழமை (ஜூன் 8) முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் மகாராஷ்டிரத்தில் தேவாலயங்கள், கோயில்கள், மசூதிகள் மற்றும் இன்னபிற மத வழிபாட்டு தலங்களை திறப்பது தொடா்பாக இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை என்று அந்த மாநில சட்டம் மற்றும் நீதித்துறை செயலா் ராஜேந்திர பாகவத் தெரிவித்தாா். இதன் மூலம் மகாராஷ்டித்தில் உள்ள வழிபாட்டு தலங்களை மேலும் சில நாள்களுக்கு மூடியே வைத்திருக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் பலியானவா்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரம் முதல் இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் இம்மாதம் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT