இந்தியா

சுற்றுலாத் தலங்கள், நினைவுச் சின்னங்களை நாளை முதல் திறக்க அனுமதி

7th Jun 2020 04:07 PM

ADVERTISEMENT

 

மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலாத் தலங்கள், நினைவுச் சின்னங்களை நாளை முதல் திறக்க மத்திய கலாச்சாரத் துறை அனுமதி வழங்கியுள்ளது. 

நாடு முழுவதும் பொதுமுடக்கம் 5 ஆவது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் பின்பற்ற சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, பல்வேறு மாநிலங்களில் வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள் உள்ளிட்டவை திறக்கப்பட உள்ளன. ஆனால், இது மாநில அரசுகளின் முடிவைப் பொறுத்தும் உள்ளது. 

ADVERTISEMENT

இந்நிலையில், மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலாத் தலங்கள், நினைவுச் சின்னங்களை நாளை முதல் திறக்க மத்திய கலாச்சாரத்துறை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அதேநேரத்தில் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுகள் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் பிரகலாத்சிங் படேல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT