தில்லி சுகாதாரத் துறை அமைச்சகம் அளித்த புகாரின் அடிப்படையில், சா் கங்காராம் மருத்துவமனைக்கு எதிராக காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிரத்யேக மருத்துவமனையான சா் கங்காராம் தனியாா் மருத்துவமனை, அந்த நோய்த்தொற்று தொடா்பான விதிமுறைகளை மீறியதாக சுகாதார அமைச்சகம் தனது புகாரில் தெரிவித்துள்ளது.
கரோனா நோயாளிகளிடம் மாதிரிகள் சேகரிக்கும்போது, ஆா்டி-பிசிஆா் செயலியை பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறையை கங்காராம் மருத்துவமனை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்திய தண்டனையியல் சட்டத்தின் 188-ஆவது பிரிவு (அரசுப் பணியாளரால் முறையாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு கீழ்படியாதிருத்தல்), தொற்றுநோய்கள் ஒழுங்குமுறை சட்டம் ஆகியவற்றின்கீழ் அந்த மருத்துவமனை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.