இந்தியா

50% மாணவர்களுடன் ஜூலையில் பள்ளிகள் திறப்பு: ஹரியாணா அமைச்சர் தகவல்

4th Jun 2020 01:01 PM

ADVERTISEMENT


கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், வரும் ஜூலை மாதத்தில் பள்ளிகளை பரிசோதனை முறையில் திறக்க திட்டமிடப்பட்டிருப்பதாக ஹரியாணா பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கன்வர் பால் தெரிவித்துள்ளார்.

முதலில் 10 - 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், பிறகு 6 - 9ம் வகுப்பு மாணவர்களுக்கும், அதனைத் தொடர்ந்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும்பள்ளிகள் திறக்கப்படும்.

சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் 50% மாணவர்களுடன் பள்ளிகள் இயங்கும். உதாரணமாக 30 மாணவர்களைக் கொண்ட ஒரு வகுப்பில் 15 மாணவர்கள் காலையிலும், 15 மாணவர்கள் மதியத்திலும் பள்ளியில் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்.

பரிசோதனை முயற்சியாக முதலில் 4 முதல் 5 பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT

Tags : Haryana
ADVERTISEMENT
ADVERTISEMENT