இந்தியா

பாகிஸ்தானில் விமானப் பயணிகளுக்கு 2 நாள் தனிமைப்படுத்தும் நிபந்தனை தளர்வு

4th Jun 2020 01:32 PM

ADVERTISEMENT

 

 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் விமானப் பயணிகளுக்கு 48 மணி நேர தனிமைப்படுத்தும் நிபந்தனையை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது.

கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், 5-ம் கட்ட ஊரடங்கில் பெரும்பாலான நாடுகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விமானப் பயணிகளின் பயணக் கட்டுப்பாடுகள் சிலவற்றையும் தளர்த்தியுள்ளது.

ADVERTISEMENT

இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் சிறப்பு விமானத்தில் வரும் பயணிகள் அனைவரும் குறைந்தது 48 மணி நேரம் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்க வைத்து வந்தனர். இந்த நிபந்தனையைப் பாகிஸ்தான் அரசு தற்போது தளர்த்தியுள்ளது. அதற்குப் பதிலாக விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்று விமான வட்டாரங்கள் தெரிவித்தன.  

கரோனா வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களின் திறன் குறைந்து வருகின்றது. எனவே இந்த முடிவை அரசு மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. 

பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதே நேரத்தில் தேசிய சுகாதார நிறுவனம் (என்ஐஎச்) மற்றும் விமான நிலையங்களில் உள்ள மாகாண சுகாதாரத் துறையால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்வார்கள். 

மருத்துவ பரிசோதனை மற்றும் கரோனா வைரஸ் பரிசோதனைக்கு பின்னர், பயணிகள் எந்தவொரு அறிகுறிகளையும் இல்லையெனில், தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

கடந்த புதன்கிழமை பிஐஏ சிறப்பு விமானத்தில், அமெரிக்காவிலிருந்து வந்த 281 பயணிகள் மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து வந்த 253 பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT