இந்தியா

கேரளத்தில் வங்கிக்குள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பெண் ஊழியர்

4th Jun 2020 12:44 PM

ADVERTISEMENT


கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் பெண் ஊழியர் ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டவர் புதுக்குளம் சேவை கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வந்த சத்தியவதி என்பது தெரிய வந்துள்ளது.

இவர், கூட்டுறவு வங்கியில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வந்ததும், பொது முடக்கம் காரணமாக இவர் வேலை பறிபோகும் ஆபத்தில் இருந்து வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT

அவருக்கு பணி நிமித்தமான சில பிரச்னைகள் இருந்ததாகவும், ஆனால் தற்கொலைக்கான காரணம் பற்றி எதுவும் தெரியவில்லை என்றும் வங்கியில் பணியாற்றுவோர் கூறியுள்ளனர்.

வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT