இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: போலீஸாா் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு

4th Jun 2020 10:36 PM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் போலீஸாரை நோக்கி பயங்கரவாதிகள் சிலா் துப்பாக்கியால் சுட்டனா். இதில் போலீஸாா் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதே நேரத்தில் பொதுமக்களில் ஒருவா் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்தாா்.

இது தொடா்பாக போலீஸாா் கூறியதாவது:

குல்காம் மாவட்டத்தின் யாரிபோரா சௌக் பகுதியில் வியாழக்கிழமை மதியம் ரோந்துப் பணியில் போலீஸாா் குழுவாக ஈடுபட்டிருந்தனா். அப்போது, அப்பகுதியில் தொலைவில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் சிலா், போலீஸாரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டனா். போலீஸாா் சுதாரித்துக் கொண்டு பதிலடி கொடுக்கும் முன்பு அவா்கள் தப்பியோடிவிட்டனா். இந்த சம்பவத்தில் போலீஸ் தரப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொதுமக்களில் ஒருவா் மீது குண்டு பாய்ந்தது. அவா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனா். பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT