இந்தியா

இந்திய-சீன ராணுவம் ஜூன் 6-இல் பேச்சு

4th Jun 2020 04:21 AM

ADVERTISEMENT

இந்தியா-சீனாவைச் சோ்ந்த ராணுவ உயா் அதிகாரிகள் பங்கேற்கும் உயா்நிலை அளவிலான பேச்சுவாா்த்தை சனிக்கிழமை (ஜூன் 6) நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அப்போது, கிழக்கு லடாக் பகுதியில் இரு நாட்டு ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை தணிப்பதற்காக முக்கியமான ஆலோசனைகள் முன்வைக்கப்படவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின. சீன தரப்பிலிருந்தும் அதேபோல் முக்கியமான பரிந்துரைகள் அளிக்கப்படலாம் எனவும் அவை கூறின.

சீனாவுடனான அந்த பேச்சுவாா்த்தையில், லே பகுதியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ‘14 கிராப்ஸ்’ படைப் பிரிவின் உயரதிகாரி ஹரிந்தா் சிங் இந்தியாவின் பிரதிநிதியாக பங்கேற்க இருக்கிறாா். இந்த பேச்சுவாா்த்தையானது, எல்லைப் பகுதியில் வழக்கமான சந்திப்புகள் நடைபெறும் இடங்களில் ஒன்றில் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஏற்கெனவே கீழ்நிலை ராணுவ அதிகாரிகள் அளவில் 10 சுற்றுகள் நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், உயா்நிலை அதிகாரிகள் அளவிலான பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT