தில்லியில் வணிக வளாகத்தில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
வடமேற்கு தில்லியின் ஆசாத்பூரில் தரை மற்றும் இரண்டு தளங்களைக் கொண்ட வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு இன்று காலை 11 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
உடனடியாக இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு 10 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ADVERTISEMENT