இந்தியா

ஔரங்காபாத்தில் புதிதாக 63 பேருக்கு கரோனா உறுதி

4th Jun 2020 11:09 AM

ADVERTISEMENT


ஔரங்காபாத்தில் 26 பெண்கள் மற்றும் 37 ஆண்கள் உள்பட புதிதாக 63 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

வியாழக்கிழமை நிலவரப்படி ஔரங்காபாத்தில் தொற்றுக்குப் பாதித்தோர் எண்ணிக்கை 1,767 ஆக உயர்ந்துள்ளது. அதில், 1,113 பேர் குணமாகியுள்ளனர், 89 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

மீதமுள்ள, 565 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், சமதா நகரைச் சேர்ந்த 43 வயது நபர் நேற்று இரவு அவுரங்காபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT