இந்தியா

கரோனா பாதித்த எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்களின் எண்ணிக்கை 475 ஆக உயர்வு

4th Jun 2020 11:13 AM

ADVERTISEMENT

 

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. இதில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்களும் தொற்றுக்கு ஆளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) ஊழியர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என 479 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், ஆய்வக ஊழியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு காவலர்களும் இதில் அடங்குவர். 

ADVERTISEMENT

 இவா்களில் 2 மருத்துவப் பேராசிரியா்கள், 17 உறைவிட மருத்துவா்கள், 38 செவிலியா்கள், 14 தொழில்நுட்ப வல்லுநா்கள், ஐந்து உணவக பணியாளா்கள், 74 மருத்துவ உதவியாளா்கள், 54 தூய்மைப் பணியாளா்கள், 74 பாதுகாவலா்கள் அடங்குவா். 

இவர்களில் 329 மருத்துவப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை 150-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளா்கள் நோயில் இருந்து மீண்டு பணியில் சோ்ந்துள்ளனா். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT