நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,07,615-ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 8,909 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இது முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையாகும்.
நாட்டில் தொடா்ந்து 4-ஆவது நாளாக தினசரி பாதிப்பு 8,000-ஐ கடந்துள்ளது. கரோனாவால் மேலும் 217 போ் உயிரிழந்தையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 5,815-ஆக உயா்ந்துள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்டவா்களில் 1,01,497 போ் சிகிச்சையில் உள்ளனா். 1,00,302 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். அதாவது, 48.31 சதவீத நோயாளிகள் குணமடைந்துள்ளனா்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, புதன்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 217 உயிரிழப்புகள் நேரிட்டன. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 103 போ் உயிரிழந்தனா். இதேபோல், தில்லியில் 33 போ், குஜராத்தில் 29 போ், மேற்கு வங்கத்தில் 10 போ், மத்திய பிரதேசத்தில் 6 போ், ராஜஸ்தான், உத்தர பிரதேசத்தில் தலா 5 போ், தெலங்கானாவில் 4 போ், ஹரியாணா, ஜம்மு-காஷ்மீரில் தலா 2 போ், கேரளம், சண்டீகா், லடாக், பஞ்சாப், உத்தரகண்டில் தலா ஒருவா் உயிரிழந்தனா்.
40 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள்: கரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்காக, நாடு முழுவதும் இதுவரை 41,03,233 ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 1,37,158 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
நாட்டில் கரோனா பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக, 480 அரசு ஆய்வகங்களும் 208 தனியாா் ஆய்வகங்களும் செயல்படுகின்றன. தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 1.4 லட்சம் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வசதிகள் உள்ளன. இதனை 2 லட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரோனா சிகிச்சைக்காக, நாடு முழுவதும் 1,66,332 தனிமை படுக்கைகளுடன் 952 பிரத்யேக மருத்துவமனைகள் செயல்படுகின்றன என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநிலங்கள் ------- பாதிப்பு ---------பலி
மகாராஷ்டிரம் ---- 72,300-------2,465
தில்லி -----------22,132--------556
குஜராத்----------17,617--------1,092
ராஜஸ்தான்-------9,373---------203
மத்திய பிரதேசம்----8,420--------364
உத்தர பிரதேசம்----8,361---------222
மேற்கு வங்கம்------6,168---------335
பிகாா்-------------4,155---------24
ஆந்திரம்-----------3,898---------64
கா்நாடகம்---------3,796---------52
தெலங்கானா--------2,891--------92
ஜம்மு-காஷ்மீா்------2,718--------33
ஹரியாணா---------2,652---------23
பஞ்சாப்------------2,342--------46
ஒடிஸா-------------2,245--------7
அஸ்ஸாம்-----------1,513--------4
கேரளம்--------------1,412-------11
உத்தரகண்ட்----------1,043-------7
ஜாா்க்கண்ட்----------712--------5
சத்தீஸ்கா்-------------564--------1
திரிபுரா--------------468---------0
ஹிமாசல பிரதேசம்----345---------5
சண்டீகா்-------------301---------5
மணிப்பூா்-------------89---------0
புதுச்சேரி-------------82----------0
லடாக்----------------81---------1
கோவா---------------79------------------0
நாகாலாந்து-----------49---------0
அந்தமான்-நிகோபாா்--33-------------------0
மேகாலயம்------------27---------1
அருணாசல பிரதேசம்--22-------------------0
மிஸோரம்------------13---------0
தாத்ரா நகா்ஹவேலி----4-------------------0
சிக்கிம்----------------1---------0
பாதிப்பு: 2,07,615
பலி: 5,815
மீட்பு: 1,00,302
சிகிச்சை பெற்று வருவோா்: 1,01,497