இந்தியா

நாளை மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

31st Jul 2020 12:13 PM

ADVERTISEMENT

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை (சனிக்கிழமை) மாலை 4:30 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. மேலும், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பெயரும் ‘மத்திய கல்வி அமைச்சகம்’ என்று மாற்றப்பட்டுள்ளது.

இதுதவிர, 5-ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம், கல்லூரிகளில் சோ்வதற்கு தேசிய அளவிலான ஒரே நுழைவுத் தோ்வு, எம்.ஃபில். படிப்பு நிறுத்தம், தொழிற்கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் உள்ளிட்ட அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை 4:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக அவர் உரையாற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT