இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் 20 லட்சத்தைக் கடந்த கரோனா பரிசோதனைகள்

28th Jul 2020 02:50 PM

ADVERTISEMENT


உத்தரப் பிரதேச மாநிலத்தில் இதுவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா  மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநிலம் செயலாளர் அலோக் குமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். 

உ.பி.யில் நேற்று மட்டும் சுமார் 91,830 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இதையடுத்து, கரோனா பரிசோதனைகள் அதிகம் செய்யப்பட்ட மாநிலங்களில் தமிழகத்தை அடுத்து இரண்டாவது இடத்தில் உத்தரப் பிரதேசம் உள்ளது என்று அவர் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். 

மேலும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் 26,204 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT