இந்தியா

ரஃபேல் போர் விமானங்கள் தரையிறக்கம்: அம்பாலா பகுதியில் 144 தடை உத்தரவு

28th Jul 2020 06:12 PM

ADVERTISEMENT

பிரான்ஸில் இருந்து புறப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் நாளை இந்தியாவை வந்தடைவதையொட்டி, ஹரியாணா மாநிலம் அம்பாலா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பிரான்ஸிடம் இருந்து ரூ.60,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போா் விமானங்களை வாங்க மத்திய அரசு கடந்த 2016-ல் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்படி, முதற்கட்டமாக 5 ரஃபேல் போர் விமானங்கள் நேற்று (திங்கள்கிழமை)  பிரான்ஸில் இருந்து புறப்பட்டன. நாளை(புதன்கிழமை) ஹரியாணா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தை இவை வந்தடைய உள்ளன. 

இதையொட்டி, பாதுகாப்பு கருதி அம்பாலா விமானப்படை தளத்தைச் சுற்றியுள்ள 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானப்படை தளத்தைச் சுற்றி ட்ரோன்கள் கண்காணிப்பில் ஈடுபடும் என்றும் அம்பாலா டி.எஸ்.பி. முனிஷ் சேஹல் தெரிவித்துள்ளார்.

Tags : Rafale
ADVERTISEMENT
ADVERTISEMENT