இந்தியா

ஊழல் வழக்கு: மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப்புக்கு 12 ஆண்டுகள் சிறை

28th Jul 2020 06:31 PM

ADVERTISEMENT


கோலாலம்பூர்: ஊழல் வழக்கில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்குக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மலேசிய நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

பல கோடி ஊழல் வழக்கில், முன்னாள் பிரதமர் நஜீப்பின் பங்கு சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டிருப்பதால், அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

மலேசியாவில் உயர் பதவியில் இருந்த நபர் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை. தீர்ப்பு வெளியான போது, எந்த சலனமும் இல்லாமல் நஜீப் அமைதியாக நின்றிருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாகவும், இந்த முறைகேடு நடந்தது பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்றும் நஜீப் கூறியுள்ளார்.
 

ADVERTISEMENT

Tags : hot news
ADVERTISEMENT
ADVERTISEMENT