திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 101 மூதாட்டி பூரண குணமடைந்து வீடு திரும்பினாா்.
திருப்பதியைச் சோ்ந்த 101 வயது மூதாட்டிக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டதால் அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் தொற்று உறுதியானதை தொடா்ந்து அவா் கடந்த 14ஆம் தேதி திருப்பதியில் உள்ள பத்மாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். 10 நாட்கள் சிகிச்சை பெற்ற வந்த அவா் முழுமையாக குணமடைந்ததால் மருத்துவா்கள் அவரை மருத்துவமனையிலிருந்து சனிக்கிழமை காலை வீட்டிற்கு அனுப்பி வைத்தனா். அவருக்கு மருத்துவமனை அதிகாரிகள், ஊழியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.