இந்தியா

கார்கில் நினைவு தினம்: போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை

26th Jul 2020 11:25 AM

ADVERTISEMENT

கார்கில் நினைவு தினத்தையொட்டி, தில்லியில் உள்ள நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படைத் தளபதிகள் மரியாதை செலுத்தினர். 

கார்கில் போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ஆம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று 21 ஆவது கார்கில் போர்  வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, தில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் மற்றும் முப்படைத் தளபதிகள் மரியாதை செலுத்தினர். 

ADVERTISEMENT

Tags : kargil
ADVERTISEMENT
ADVERTISEMENT