தில்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 1,075 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 1,075 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 21 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,30,606 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 3,827 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 1,807 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,14,875 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் அங்கு 11,904 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தில்லியில் இன்று 17,533 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை மொத்தம் 9,46,777 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.