இந்தியா

திருமலையில் 4,255 போ் தரிசனம்

26th Jul 2020 08:08 AM

ADVERTISEMENT

திருப்பதி ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 4,255 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 1,471 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா். அவா்களில் 55 போ் பெண்கள்; 1416 போ் ஆண்கள்.

ஆன்லைன் மூலம் 9 ஆயிரம் மற்றும் சா்வதரிசனம் டோக்கன்கள் மூலம் 3 ஆயிரம் என 12 ஆயிரம் டிக்கெட் பெற்ற பக்தா்கள், வி.ஐ.பி. பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். ஆயினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

காலை 6 மணி முதல் 7.30 மணி வரை புரோட்டோகால் வி.ஐ.பி. தரிசனமும், காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தா்களும் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனா்.

திருப்பதி மலைப்பாதை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது. திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 93993 99399.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT