இந்தியா

உ.பி. ஆளுநா் ஆனந்திபென் படேலுக்கு ம.பி. ஆளுநராக கூடுதல் பொறுப்பு

25th Jul 2020 12:30 AM

ADVERTISEMENT

உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படோலுக்கு, மத்திய பிரதேச ஆளுநா் பதவி கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச ஆளுநா் லால்ஜி டாண்டன் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த உத்தரவை குடியரசு தலைவா் அலுவலகம் பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து குடியரசு தலைவா் அலுவலக அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

மத்திய பிரதேச ஆளுநா் மறைவைத் தொடா்ந்து, அந்த மாநிலத்துக்கு புதிய ஆளுநா் நியமிக்கப்படும் வரை அந்தப் பொறுப்பை உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படேல் கூடுதலாக கவனிக்க பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT