இந்தியா

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் கரோனா தீவிரமடையாது: ஆய்வு

25th Jul 2020 04:44 PM

ADVERTISEMENT


ஹைதராபாத்: இந்தியா போன்ற மிகப்பெரிய நாடுகளில் அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் கரோனா தீவிரமடையாது என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் என கரோனா பரவலில் தனித்தனி பாதை இருக்கும், அந்த வழியிலேயே அந்த மாநிலம் கரோனா பேரிடர் காலத்தில் பயணிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உதாரணமாக தில்லியில் இந்த மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் கரோனா தீவிரமடையலாம், அதே நேரம் செப்டம்பரில் தமிழ்நாடு, மகாராஷ்டிரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் தீவிரமடையலாம் என்று இந்திய பொது சுகாதார மையத்தின் இயக்குநர் பேராசிரியர் ஜி.வி.எஸ். மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் கரோனா தொற்றுப் பரவ வெகுக் காலம் ஆனது, அங்கு புலம்பெயர் தொழிலாளர்கள் மாநிலத்துக்குத் திரும்பிய பிறகே தொற்றுப் பரவத் தொடங்கியது.

ADVERTISEMENT

எனவேதான் ஒவ்வொரு மாநிலமும் கரோனா தொற்றுப் பரவலில் தனித்தனி பாதையைக் கொண்டிருக்கின்றன என்றும், ஒவ்வொரு மாநிலத்திலும் கரோனா தொற்று வெவ்வேறு வகைகளில் பரவுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. எனவேதான் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் கரோனா தொற்று தீவிரமடையாது, நாட்டில் எண்ணற்ற முறை கரோனா தீவிரமடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுபோலவே பிகாரில் திடீரென ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் மாநிலத்துக்குத் திரும்பிய போது கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, அப்போது அலை எழும்பி, அடங்கவும், ஒருவரிடம் இருந்து கரோனா தொற்று 10 - 14 நாள்களுக்குள் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்றுப் பரவும் போது அடுத்த அலை எழுகிறது.

எனவே, கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அரசுகள் அனைத்தும் கடுமையான நடவடிக்கைகளை பின்பற்றி, உரிய நடைமுறைகளை உருவாக்க வேண்டும். பொது மக்களும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் கரோனா தீவிரமடையும் காலம் நீண்டதாக இருக்கும். சில பகுதிகளில் செப்டம்பர் மாத இறுதி அல்லது அக்டோபரில் தீவிரமடையலாம், அதே நேரம், கரோனா தொற்று குறைவாக இருக்கும் மாநிலங்களில் அதன்பிறகு தொற்றுப் பரவல் தீவிரமடையலாம்.

அதே சமயம் ஹரியாணா, தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் செப்டம்பர் மத்தியில் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்படும், இந்த மாநிலங்களில் தற்போது கரோனா பரவல் அதிகமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT