இந்தியா

கேரளம், கர்நாடகத்தில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா. அறிக்கை

25th Jul 2020 05:46 PM

ADVERTISEMENT


இந்தியாவின் கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இந்திய துணைக் கண்டத்தில் இருந்து செயல்படும் அல்-கய்தா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 150  முதல் 200 பயங்கரவாதிகள் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் பகுதிகளில் பதுங்கியிருந்து தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ஐஎஸ்ஐஎஸ், அல் கய்தா போன்ற பயங்கரவாத இயக்கங்கள், தலிபான்கள் என்ற அடையாளத்தோடு, இந்திய துணைக் கண்டமான ஆஃப்கானிஸ்தானின் நிம்ரஸ், ஹெல்மந்த் மற்றும் கந்தஹார் மாகாணங்களில் இருந்து செயல்படுகின்றன.

இந்த குழுக்களைச் சேர்ந்த 150 முதல் 200 பயங்கரவாதிகள் வங்கதேசம், இந்தியா, மியான்மர், பாகிஸ்தான் நாடுகளில் இருக்கிறார்கள். இந்த அமைப்பின் தற்போதைய தலைவர் ஒசாமா மஹ்மூத். இந்த அமைப்பு, தங்களது முன்னாள் தலைவரின் மரணத்துக்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் இந்த நாடுகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐஎஸ் அமைப்பின் இந்திய கிளை என கருதப்படும் (ஹிந்த் விலாயா), கடந்த 2019-ஆம் ஆண்டு மே 10ல் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் 180 - 200 உறுப்பினர்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தது.

மேலும், இந்தியாவின் கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஐஎஸ் பயங்கரவாதிகள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT