இந்தியா

கரோனா குறித்து கேலி செய்யாமல் கவனத்துடன் இருந்திருக்கலாம்: ம.பி. முதல்வர் பற்றி கமல்நாத் ட்வீட்

25th Jul 2020 10:13 PM

ADVERTISEMENT


மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கரோனா குறித்து கூடுதல் கவனத்துடன் இருந்திருக்கலாம் என்றும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் கமல்நாத் சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் அவர் விரைவில் குணமடையே வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் கமல்நாத் பதிவிட்டிருப்பதாவது:

"நீங்கள் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து மிகவும் வருத்தப்பட்டேன். நீங்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நாங்கள் கரோனா குறித்து தீவிரமாக இருந்தபோது, நீங்கள் அதை சிலசமயம் நாடகம் என்று அழைத்தீர்கள், சிலசமயம் கரோனா குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றீர்கள், சிலசமயம் காங்கிரஸ் அரசைக் காப்பதற்கான சூழ்ச்சி, ஆயுதம் என்று கூறினீர்கள்.

ADVERTISEMENT

இது உயிர்க்கொல்லி நோய் என்றும் அனைவரும் நெறிமுறைகளைப் பின்பற்றி கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றும் நாங்கள் தொடக்கம் முதலே கூறி வந்தோம்.

ஒருவேளை நீங்கள் கரோனா குறித்து கேலி செய்யாமல் இருந்திருந்தால், கரோனாவால் பாதிக்கப்படாமல் இருந்திருக்கலாம். பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, கூடுதல் கவனத்துடன் இருந்திருக்கலாம். நீங்கள் விரைவில் குணமடைந்து பணிக்குத் திரும்ப வாழ்த்துகிறேன்." என்று பதிவிட்டுள்ளார் கமல்நாத்.

Tags : KamalNath
ADVERTISEMENT
ADVERTISEMENT