இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 9,251 பேருக்கு கரோனா: மேலும் 257 பேர் பலி

25th Jul 2020 08:28 PM

ADVERTISEMENT


மகாராஷ்டிரத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 9,251 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா நிலவரம் பற்றிய இன்றைய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 9,251 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 257 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் இன்று 7,227 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,66,368 ஆக உயர்ந்துள்ளது. இதில் இதுவரை 2,07,194 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 1,45,481 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகாராஷ்டிரத்தில் இறப்பு விகிதம் 3.65 சதவிகிதம். குணமடைவோர் விகிதம் 56.55 சதவிகிதம்.

ADVERTISEMENT

மும்பை:

மும்பையில் இன்று புதிதாக 1,090 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 52 பேர் பலியாகியுள்ளனர். 617 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,07,981 ஆக உயர்ந்துள்ளது. இதில் 78,877 பேர் குணமடைந்துள்ளனர். 6,033 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் அங்கு 23,071 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT