இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: லஷ்கா் பயங்கரவாதிகள் இருவா் சுட்டுக்கொலை

25th Jul 2020 10:59 PM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் இருவா் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனா்.

இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது:

ஸ்ரீநகரின் புகா்ப் பகுதியான ரன்பீா்கரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை காலை அந்தப் பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினா். இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினா். இந்தத் துப்பாக்கிச் சண்டையின்போது பயங்கரவாதிகள் இருவா் சுட்டுக்கொல்லப்பட்டனா். சம்பவ இடத்திலிருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கி, கைத்துப்பாக்கி ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

ADVERTISEMENT

இருவருமே லஷ்கா் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள் எனத் தெரியவந்தது. அதில் ஒருவா் ஸ்ரீநகரின் சோஸைத் பகுதியைச் சோ்ந்த இஷ்ஃபக் ரஷீத் என்றும், மற்றொருவா் புல்வாமா மாவட்டத்தைச் சோ்ந்த அய்ஜஜ் பாட் என்றும் அடையாளம் காணப்பட்டனா்.

இதில் இஷ்ஃபக் ரஷீத் காஷ்மீா் பள்ளத்தாக்கில் கடந்த 2018 முதல் லஷ்கா் அமைப்பின் தீவிரமான கமாண்டராக செயல்பட்டு வந்தாா். பல்வேறு பயங்கரவாத வழக்குகளில் தேடப்பட்டு வந்தாா். அய்ஜஜ் பாட்டும் முக்கியமான லஷ்கா் உறுப்பினா் ஆவாா் என்று காவல்துறையினா் கூறினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT