இந்தியா

புது தில்லியில் 450 படுக்கை வசதியுடன் அரசு மருத்துவமனை திறப்பு

25th Jul 2020 01:00 PM

ADVERTISEMENT


புது தில்லி: புது தில்லியில் 450 படுக்கை வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனையை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திறந்து வைத்தார்.

புது தில்லியின் புராரி பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட மிகப்பெரிய அரசு மருத்துவமனைக் கட்டடத்தை முதல்வர் அரவிந்த் கேஜரிவால், காணொலி காட்சி வாயிலாக இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைத்தார்.

தில்லியில் கரோனா தொற்றுப் பரவல் உச்சத்தைத் தொட்டு தற்போது ஓரளவுக்குக் குறைந்து வருகிறது. முன்னதாக, கரோனா தொற்று அதிகரித்த போது கரோனா நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதி இல்லாமல் ஏராளமான நோயாளிகள் அவதிப்பட்டதும், பெரும்பாலான மருத்துவமனைகள் கரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டதால் வேறு பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமமும் ஏற்பட்ட நிலையில், புதிய மருத்துவமனை திறக்கப்பட்டிருப்பது, பெரும் சிக்கலுக்குத் தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT