இந்தியா

சர்ஜீல் இமாம் மீது தில்லி காவல் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

25th Jul 2020 08:14 PM

ADVERTISEMENT


தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது ஆத்திரமூட்டும் உணர்வைத் தூண்டும் வகையில் பேசிய வழக்கு தொடர்பாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சர்ஜீல் இமாமுக்கு எதிராக தில்லி காவல் துறையினர் இன்று (சனிக்கிழமை) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

தில்லி பட்டியாலா நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில், "சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், தேச விரோதச் சட்டம், இருபிரிவினர் இடையே பகையை ஊக்குவித்தல் மற்றும் வதந்தி பரப்புதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன." என்றனர்.

சர்ஜீல் இமாம் தற்போது குவாஹட்டி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு அண்மையில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : Sharjeel Imam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT