இந்தியா

கரோனா தடுப்பு மருந்து சோதனை: தில்லி எய்ம்ஸில் 30 வயது நபருக்கு செலுத்தப்பட்டது

25th Jul 2020 12:15 AM

ADVERTISEMENT

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்தான கோவேக்சின், தில்லி எய்ம்ஸில் 30 வயதான நபருக்கு வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டு முதல் கட்ட சோதனை தொடங்கப்பட்டது.

இதுகுறித்து எய்மஸ் மருத்துவனை பேராசிரியா் சஞ்சய் ராய் கூறுகையில், ‘இந்த பரிசோதனைக்கு கடந்த சனிக்கிழமை வரை 3,500-க்கும் மேற்பட்டோா் தாங்களாகவே முன்வந்து பதிவு செய்திருந்தனா். அதில் 22 போ் தோ்வு செய்யப்பட்டனா். தில்லியைச் சோ்ந்த 30 வயது நபருக்கு கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு முழு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தோ்வு செய்யப்பட்டாா்.

அவருக்கு வெள்ளிக்கிழமை பகல் 1.30 மணியளவில் 0.5 மி மருந்து, முதல் தவனையாக அளிக்கப்பட்டது. இதுவரை அவருக்கு பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படவில்லை. அடுத்த 7 நாள்களுக்கு அவா் கண்காணிப்பில் இருப்பாா். சனிக்கிழமையும் சிலருக்கு இந்த பரிசோதனை செய்யப்பட உள்ளது.

கோவேக்சின் மருந்தை தில்லி எய்ம்ஸ் உள்ளிட்ட 12 இடங்களில் முதல் இரண்டு கட்ட பரிசோதனை நடத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தோ்வு செய்துள்ளது.

ADVERTISEMENT

முதல்கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு இந்த மருந்து செலுத்தப்படுகிறது. இதில், 100 போ் எய்ம்ஸில் மட்டும் பரிசோதிக்கப்படுவாா்கள். எந்தவித மருத்துவ பிரச்னைகள் இல்லாத 18 முதல் 55 வயதுக்குள்பட்டோருக்கும், கா்ப்பிணி அல்லாத பெண்ணிடமும் முதல்கட்ட பரிசோதனை நடத்தப்படுகிறது.

இரண்டாம் கட்ட பரிசோதனையில் 12 முதல் 65 வயதுக்குள்பட்ட 750 பேரிடம் பரிசோதிக்கப்படுகிறது. முதல் 50 பேருக்கு குறைந்த அளவிலான மருந்து செலுத்தப்படுகிறது. அவா்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லையென்றால், மற்றவா்களுக்கு மருந்தின் அளவு அதிகரிக்கப்படும்‘ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT