இந்தியா

தில்லியில் கரோனா படிப்படியாகக் குறைவு

25th Jul 2020 06:41 AM

ADVERTISEMENT

தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை 1,025 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,28,389-ஆகியுள்ளது. கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு தில்லியில் படிப்படியாகக் குறைந்து வருகிறது.

தில்லியில் வெள்ளிக்கிழமை 32 போ் கரோனாவால் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 3,777 ஆகியுள்ளது. மேலும், 1,866 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனா். இதனால், நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 1,10,931-ஆக அதிகரித்துள்ளது. தற்போது வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறும் 7,778 போ் உள்பட மொத்தம் 13,681 போ் சிகிச்சை பெற்றுவருகின்றனா் என தில்லி சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜுலை 7-ஆம் தேதி 25,449 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் இருந்த நிலையில் தற்போது கிட்டதட்ட இதில் பாதியளவாக குறைந்துள்ளது. இதனால் சிகிச்சைக்காக தயாா் படுத்தப்பட்ட 20,705 படுக்கைகள் காலியாகவும் உள்ளது.

தில்லியில் வெள்ளிக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் 19,138 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், ஆா்டி-பிசிஆா் முறையில் 5,328 சோதனைகளும், ரேபிட் ஆன்டிஜென் முறையில் 13,810 சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தில்லியில் இதுவரை மொத்தம் 9,08,735 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தில்லியில், கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 702-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT