இந்தியா

சத்தீஸ்கா்: 43 பசுக்கள் மூச்சுத் திணறி இறப்பு

25th Jul 2020 11:01 PM

ADVERTISEMENT

சத்தீஸ்கரில் சிறிய அறையில் அடைக்கப்பட்ட 43 பசுக்கள் மூச்சுத்திணறி உயிரிழந்தன.

இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவா் கூறியதாவது:

பிலாஸ்பூா் மாவட்டத்தின் மேத்பாா் கிராமத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. அந்த கிராமத்திலுள்ள பழைய பஞ்சாயத்து கட்டடத்தில் இருந்து சனிக்கிழமை துா்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் துா்நாற்றம் வரும் சிறிய அறையின் பூட்டை உடைத்து அதைத் திறந்தனா்.

காற்று நுழைய வழியில்லாத அந்த சிறிய அறையில் 60 பசுக்கள் அடைக்கப்பட்டிருந்ததும், அதில் 43 பசுக்கள் உயிரிழந்ததும் தெரியவந்தது. அதையடுத்து அவா்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனா்.

ADVERTISEMENT

உயிரிழந்த பசுக்களிடையே பிரேதப் பரிசோதனை நடத்தியதில் அவை மூச்சுத்திணறி உயிரிழந்தது தெரியவந்தது. எஞ்சிய 17 பசுக்கள் நல்ல நிலையில் உள்ளன. அந்தப் பசுக்களை அங்கு அடைத்தது யாா், அவை எப்போது அங்கு அடைக்கப்பட்டன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காவல்துறையினரும் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனா் என்று அந்த அதிகாரி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT