இந்தியா

அயோத்தி சென்றார் ஆதித்யநாத்; ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

25th Jul 2020 03:42 PM

ADVERTISEMENT


லக்னௌ: ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்ய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், இன்று அயோத்தி சென்றார்.

இன்று மதியம் அயோத்தி வந்த யோகி ஆதித்யநாத், ராமர் கோயிலில் லஷ்மண், பாரத் மற்றும் ஷத்ருகன் சிலைகளை புதிய இடங்களில் அமைக்க நடத்தப்பட்ட பூஜையில் பங்கேற்றார்.

மேலும், ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகளையும் ஆதித்ய நாத் நேரில் ஆய்வு செய்தார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியாவில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படும் நிலையில், முதல்வர் இன்று பயணம் மேற்கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவைத் தொடர்ந்து கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற உள்ளது.

Tags : ayodhya
ADVERTISEMENT
ADVERTISEMENT