இந்தியா

நாடு முழுவதும் ஒரே நாளில் 4 லட்சம் கரோனா பரிசோதனைகள்

25th Jul 2020 11:55 AM

ADVERTISEMENT

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 4 லட்சம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி நாள் ஒன்றுக்கு நாடு முழுவதும் 3.5 லட்சம் வரை நடைபெற்று வந்த கரோனா வைரஸ் பரிசோதனைகள் நேற்று 4 லட்சத்தை கடந்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

இதுவரை இந்தியாவில் மொத்தம் 1,58,49,068 பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளதாகவும், நேற்றும் மட்டும் ஒரே நாளில் 4,20,898 சோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி கரோனா பாதிப்பிலிருந்து 8,49,431 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 31358 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags : Corona virus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT