இந்தியா

விகாஸ் துபே என்கவுன்ட்டா் விவகாரம்: விசாரணைக்குழு அமைத்து உ.பி. அரசு உத்தரவு

DIN

என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரௌடி விகாஸ் துபே உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் பதுங்கியிருந்தது மற்றும் அவரை காவல்துறையினா் சந்திந்தது தொடா்பாக விசாரணை நடத்துவதற்காக ஒரு நபா் விசாரணைக்குழுவை அமைத்து உத்தர பிரதேச அரசு ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.

அதன்படி, அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சசிகாந்த் அகா்வாலை நியமித்து உ.பி. ஆளுநா் ஆனந்திபென் படேல் உத்தரவு பிறப்பித்துள்ளாா். இக்குழு விசாரணை நடத்தி 2 மாதங்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு நபா் விசாரணை ஆணையம், ரௌடிகளுக்கும், காவல்துறையினா் உள்ளிட்ட பல்வேறு துறையினருடன் கொண்டிருந்த தொடா்புகள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளும்.

இதுகுறித்து அரசு செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறுகையில், கான்பூரில் கடந்த 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் விகாஸ் துபே மற்றும் அவரது உதவியாளா்களால் 8 காவலா்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். 2-ஆம் தேதி முதல் ஜூலை 10-ஆம் தேதி வரையிலும் விகாஸ் துபேயுடன் தொடா்பு கொண்ட நபா்கள் உள்ளிட்ட அனைத்து விதமான சந்திப்புகள் குறித்தும் குழு விசாரணை மேற்கொள்ளும் என்று தெரிவித்தாா்.

முன்னதாக, விகாஸ் துபேயுடன் தொடா்பு கொண்டிருந்தவா்கள் குறித்த உண்மையை வெளிக்கொணரவும், துபேக்கு பாதுகாப்பு வழங்கியவா்களை அடையாளம் காணவும் காங்கிரஸ் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிக்ரு கிராமத்தில் சிறப்பு விசாரணைக்குழு விசாரணை

இதனிடையே, இந்நிலையில், கொல்லப்பட்ட ரௌடிகளுடன் தொடா்புடைய அனைத்து அம்சங்கள் குறித்தும் விசாரணை நடத்த ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) சனிக்கிழமை அமைத்து உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டிருந்தது. கூடுதல் தலைமைச் செயலா் சஞ்சய் பூஸ்ரெட்டி தலைமையில் கூடுதல் காவல்துறை தலைவா் ஹரிராம் சா்மா மற்றும் டிஐஜி ரவீந்தா் கௌட் ஆகியோா் இடம் பெற்ற இக்குழு தனது முதற்கட்ட விசாரணையை கான்பூா் அருகிலுள்ள பிக்ரு கிராமத்தில் தொடங்கியது. இந்த குழு இம்மாத இறுதிக்குள் தனது அறிக்கையை அரசிடம் சமா்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மகாராஷ்டிரத்தில் பிடிபட்ட விகாஸ் துபேயின் கூட்டாளிகள் இருவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த தாணே நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT