இந்தியா

நாட்டில் குணமடைவோர் விகிதம் 63.02%: மத்திய அரசு

13th Jul 2020 07:01 PM

ADVERTISEMENT


இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 63.02 சதவிகிதமாக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அமைச்சகம் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட பத்திரிகை செய்தி:

"கடந்த 24 மணி நேரத்தில் 18,850 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,53,470 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து குணமடைவோர் விகிதம் 63.02 சதவிகிதமாக உள்ளது. தேசிய அளவிலான சராசரியைக் காட்டிலும் 19 மாநிலங்களில் குணமடைவோர் விகிதம் கூடுதலாகவே உள்ளது. இந்தப் பட்டியலில் தமிழகம் 64.66 சதவிகிதத்துடன் 18-வது இடத்தில் உள்ளது.

இன்றைய தேதியில் 3,01,609 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளிலோ, கரோனா மையங்களிலோ அல்லது வீட்டிலோ மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். சிகிச்சையில் உள்ளவர்களைக் காட்டிலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,51,861 கூடுதலாக உள்ளது. 

ADVERTISEMENT

கடந்த 24 மணி நேரத்தில் 2,19,103 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 1,18,06,256 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன."

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT