இந்தியா

கல்கத்தா உயர் நீதிமன்றப் பணிகள் ரத்து ஜூலை 19 வரை நீட்டிப்பு

13th Jul 2020 06:12 PM

ADVERTISEMENT


கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கல்கத்தா உயர் நீதிமன்றப் பணிகள் ரத்து ஜூலை 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உயர் நீதிமன்றப் பணிகள் ரத்து செய்யப்பட்டிருப்பது ஜூலை 19 வரை நீட்டிக்கப்படுவதாக நீதிமன்ற தலைமை நீதிபதி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஜூலை 10 முதல் 13 வரை, நீதிமன்றப் பணிகள் ரத்து செய்யப்படுவதாக உத்தரவிடப்பட்டிருந்தது.
 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT