இந்தியா

தில்லியில் நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோரை விட குணமடைவோர் அதிகம்

13th Jul 2020 05:52 PM

ADVERTISEMENT


புது தில்லி: தலைநகர் தில்லியில் ஜூலை மாதத்தில் கடந்த 12 நாள்களாக நாள்தோறும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களைக் காட்டிலும் கரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தில்லி அரசு வெளியிட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூலை 1 முதல் 12-ம் தேதி வரை தில்லியில் 25,134 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் இந்த காலக்கட்டத்தில் 31,640 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

ஜூலை 1 முதல் 6 வரை நாள்தோறும் கரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை, பாதிக்கப்படும் நபரை விட அதிகமாகவே இருந்துள்ளது.

இந்தக் காலக்கட்டத்தில் 6 நாள்களுக்கு கரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 2,000 ஆகவும், 3 நாள்கள் 3 ஆயிரமாகவும், ஒரு நாள் 4 ஆயிரமாகவும் இருந்துள்ளது.

ADVERTISEMENT

ஒட்டுமொத்தமாக ஜூலை 12 வரை தில்லியில் கரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 89,968 ஆகவும், கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,12,494 ஆகவும் உள்ளது.
ஜூலை 1ம் தேதி 1,644 பேர் குணமடைந்த நிலையில், அடுத்த நாளே அது 3 ஆயிரமாக உயர்ந்தது. ஜூலை 6ம் தேதி தில்லியில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை எட்டிய நாளன்று 749 பேர் குணமடைந்தனர். ஆனால் அதற்கு அடுத்த நாள் 2,129 பேர் குணமடைந்தனர்.
 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT