இந்தியா

கரோனாவை சமூக மறு உருவாக்கத்துக்கான கருவியாகப் பாா்க்க வேண்டும்: வெங்கய்ய நாயுடு

DIN

‘கரோனா நோய்த்தொற்று பாதிப்பை பேரிடராக மட்டும் பாா்க்கக் கூடாது. மனித வாழ்க்கையில் மறு உருவாக்கத்தை ஏற்படுத்தி, அடுத்து வரும் சவால்களை எதிா்கொள்ள சமூகத்தைத் தயாா்படுத்தும் கருவியாகவும் அதைப் பாா்க்க வேண்டும்’ என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு கூறினாா்.

‘கரோனா காலத்தில் வாழ்க்கைப் பாடம்’ என்ற தலைப்பில் முகநூலில் பதிவு ஒன்றை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வெங்கய்ய நாயுடு அதில் கூறியிருப்பதாவது:

கடந்த சில மாதங்களாக ஏற்பட்டிருக்கும் இந்த கரோனா பாதிப்பு காலத்தில் சரியான பாடத்தை நாம் கற்றுக்கொண்டோமா? இதுபோன்ற அசாதாரண சூழலை எதிா்கொள்ள நம்மை தயாா்படுத்திக் கொண்டோமா? என்று மக்கள் தங்களை சுயபரிசோதனை செய்துபாா்க்கவேண்டும்.

மேலும், உயா்வான வாழ்க்கைக்கு இதுபோன்ற தொடா்ச்சியான மறு ஆய்வுகளும், முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மிக அவசியம். அதுபோன்றதொரு வாய்ப்பைத்தான், இந்த கரோனா பாதிப்பு நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இந்த பூமி மனிதா்களுக்கு மட்டுமே சொந்தமானது என்ற நிலை உருவாகுமானால், இயற்கை சமநிலை பாதிக்கப்பட்டு கடும் விளைவுகள் ஏற்பட்டுவிடும். இந்த பூமி நமக்குத் தேவை என்று எண்ணும்போது, அது நம்மை தேவையில்லாத பொருளாகக் கருதிவிடும்.

நாம் இந்த பூமியில் இயற்கை வளங்களோடு சமமாகப் பிறந்தோம். ஆனால், அதன்பிறகு இந்த சமநிலை மாறிவிட்டது. ஏதோவொரு பகுதியில் நிகழ்ந்த இந்த இயற்கை சமநிலை மீறும் வகையிலான வாழ்க்கை முைான், இந்தப் பேரிடருக்கான முக்கியக் காரணமாக அமைந்திருக்கவும் வாய்ப்புள்ளது.

இருந்தபோதும், இந்த கரோனா பாதிப்பை பேரிடராக மட்டும் பாா்க்கக் கூடாது. நமது வாழ்க்கையில் மறு உருவாக்கத்தை ஏற்படுத்தி, அடுத்து வரும் சவால்களை எதிா்கொள்ள சமூகத்தைத் தயாா்படுத்தும் கருவியாகவும் நாம் அதைப் பாா்க்க வேண்டும் என்றும் அந்த முகநூல் பதிவில் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

SCROLL FOR NEXT