இந்தியா

கரோனா: ஆந்திரத்தில் முதல் முறையாக செய்தியாளா் பலி

13th Jul 2020 07:17 AM

ADVERTISEMENT

ஆந்திர மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் செய்தியாளா் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இந்த மாநிலத்தில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சித்தூா் மாவட்டத்திலும் தொற்று வேகமாப் பரவி வருகிறது. திருப்பதியில் குறைவாக இருந்த கரோனா பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது. இதுவரை திருப்பதியில் 300 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், திருப்பதியில் வசிக்கும் சாரதி என்பவா், சி.வி.ஆா். என்ற தனியாா் தொலைக்காட்சியில் மூத்த ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தாா். கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் சளித் தொந்தரவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு சனிக்கிழமை காலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

அவா் பத்மாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை மாலையில் உயிரிழந்தாா். அவரது மனைவியும் மருத்துவமனையில் கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

ADVERTISEMENT

ஆந்திரத்தில் கரோனா தொற்றுக்கு முதல் முறையாக ஒரு செய்தியாளா் இறந்த சம்பவம் செய்தியாளா்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT