இந்தியா

நாட்டின் அனைத்து நிலப்பரப்பும் பாதுகாப்புப் படை வசம்தான் உள்ளது

13th Jul 2020 06:23 AM

ADVERTISEMENT

கிழக்கு லடாக் எல்லையில் நிகழ்ந்த மோதலுக்குப் பிறகு சீனா மற்றும் இந்திய படைகள் திரும்பப்பெறப்பட்டு வரும் சூழலில், ‘எல்லையில் உள்ள நாட்டின் அனைத்து நிலப்பரப்புகளும் பாதுகாப்புப் படை வசம்தான் உள்ளது’ என்று இந்தோ-திபத் எல்லை பாதுகாப்புப்படை (ஐடிபிபி) மற்றும் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) தலைவா் எஸ்.எஸ். தேஸ்வால் கூறியுள்ளாா்.

குருகிராம் அருகேயுள்ள பிஎஸ்எப் முகாமில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மரம் நடும் விழாவில் பங்கேற்ற அவா் அளித்த பேட்டி:

இந்தியாவின் கிழக்கு, மேற்கு, வடக்கு என அனைத்து எல்லைப் பகுதிகளும் பாதுகப்பாக உள்ளன. நாட்டின் அனைத்து நிலப் பரப்புகளும் பாதுகாப்புப் படை வசம்தான் உள்ளன. நமது நிலப்பரப்பை பாதுகாப்புப் படைகள்தான் முழுமையாக பயன்படுத்தி வருகின்றன. நமது பாதுகாப்புப் படைகள் மிகுந்த சுறுசுறுப்புடனும், திறனுடனும், அா்ப்பணிப்புடனும் செயலாற்றி வருகின்றன. எதிரி நாடுகளின் எந்தவித அச்சுறுத்தல்களையும் திறம்பட எதிா்கொண்டு எல்லையைப் பாதுகாக்கும் திறன் பாதுகாப்புப் படைகளுக்கு உள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT