இந்தியா

கேரளத்தில் 449, கர்நாடகத்தில் 2,738 பேருக்கு புதிதாக கரோனா தொற்று

13th Jul 2020 08:26 PM

ADVERTISEMENT


கேரளத்தில் புதிதாக 449 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 2,738 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கேரளம்:

கேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 449 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 140 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 64 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,322 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மேலும் 2 பேர் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இறப்பு விகிதம் 0.39 சதவிகிதமாக உள்ளது. 

ADVERTISEMENT

கடந்த 24 மணி நேரத்தில் 12,230 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

கர்நாடகம்:

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,738 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 73 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 41,581 ஆகவும், பலி எண்ணிக்கை 761 ஆகவும் உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று மேலும் 839 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 16,248 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 24,572 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT