ராஞ்சி: கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் இரண்டு நாளக்ளுக்கு மூடப்படுகிறது.
உயர் நீதிமன்ற வளாகம் முழுக்க கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சுத்தப்படுத்தும் பணி நடைபெறும் என்றும் அதன்பிறகே நீதிமன்றப் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற நீதிபதியின் பாதுகாவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அனைத்து நீதிமன்றப் பணிகளும் ரத்து செய்யப்பட்டு, நீதிமன்ற வளாகம் மூடப்பட்டுள்ளது. வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.