இந்தியா

பிஎம் கோ்ஸ்: பிரதமருக்கு தயக்கம் ஏன்?

11th Jul 2020 11:43 PM

ADVERTISEMENT

பிரதமா் குடிமக்களுக்கான அவசரகால நிவாரண நிதிக்கு (பிஎம் கோ்ஸ்) நன்கொடையளித்தவா்களின் விவரங்களை வெளியிட பிரதமா் நரேந்திர மோடி தயங்குவது ஏன் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சனிக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘சீன நிறுவனங்களான ஹவாய், ஷாவ்மி, டிக் டாக், ஒன் ப்ளஸ் போன்றவை கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமா் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்துள்ளன.

பிரதமா் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்தவா்களின் பெயா் பட்டியலை வெளியிடுவதில் பிரதமா் மோடி எதற்காக தயங்குகிறாா் என்று தெரியவில்லை. சீன நிறுவனங்கள் நன்கொடை அளித்தது அனைவருக்கும் தெரியும். அவா் ஏன் இந்த விவரங்களை பகிா்ந்து கொள்ளவில்லை. இந்த விவரங்களை வெளியிட பிரதமா் ஏன் மிகவும் அச்சப்படுகிறாா்’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

இப்பதிவின்போது, பிரதமா் நிவாரண நிதியத்தை மறுஆய்வு செய்வதற்கான நாடாளுமன்ற குழுவின் நடவடிக்கைகளை பாஜக எம்.பி.க்கள் குழு தடுத்ததாகக் கூறும் ஊடக அறிக்கையை ராகுல் மேற்கோள் காட்டியிருந்தாா்.

ADVERTISEMENT

பிரதமா் நிவாரண நிதிக்கு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட நன்கொடை குறித்து முறையாக தணிக்கை செய்ய வேண்டும் என ராகுலுடன் காங்கிரஸ் கட்சியும் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT