இந்தியா

மும்பை போரிவாலி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

11th Jul 2020 11:02 AM

ADVERTISEMENT


மும்பை: மும்பையின் புறநகர்ப் பகுதியான போரிவாலி பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் இன்று காலை பயங்கர தீர விபத்து நேரிட்டது. 

தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போரிவாலி பகுதியில் எஸ்வி சாலையில் அமைந்துள்ள இந்திரபிரசாத் வணிக வளாகத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து நேரிட்டது.

கீழ் தளத்தில் பற்றிய தீ மளமளவென்று மூன்று தளங்களுக்கம் பரவியது. 16 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தீவிரமாக போராடி வருகிறார்கள்.

ADVERTISEMENT

தீ விபத்தால் பல அடி தூரத்துக்கு கரும்புகை பரவியதால், தீயணைப்புப் படையினர் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

Tags : accident
ADVERTISEMENT
ADVERTISEMENT