இந்தியா

கேரளத்தில் புதிதாக 488 பேருக்கு கரோனா

11th Jul 2020 08:17 PM

ADVERTISEMENT


கேரளத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 488 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர் பற்றி இன்றைய அறிவிப்பை அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 488 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 167 பேர், வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 76 பேர். மேலும் 2 பேர் கரோனா தொற்றால் பலியாகியுள்ளனர்.  

இதைத் தொடர்ந்து அங்கு சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3,442 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 3,965 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுதவிர்த்து இன்று மேலும் 16 பகுதிகள் கரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கேரளத்தில் மொத்தம் 195 ஹாட்ஸ்பாட் பகுதிகள் உள்ளன.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT