இந்தியா

கரோனா: இந்தியாவின் தயார்நிலை குறித்து பிரதமர் அலுவலகம் ஆய்வு

25th Jan 2020 08:31 PM

ADVERTISEMENT


கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் தயார்நிலை குறித்து பிரதமர் அலுவலகம் இன்று (சனிக்கிழமை) ஆய்வு மேற்கொண்டது.

இதுதொடர்பான கூட்டம் பிரதமருக்கான முதன்மைச் செயலர் பிகே மிஸ்ரா தலைமையில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சரவைச் செயலர், உள்துறை செயலர், வெளியுறவு செயலர், சுகாதாரத் துறை செயலர், விமானப் போக்குவரத்துச் செயலர் மற்றும் பல்வேறு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் கரோனை வைரஸ் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிகே மிஸ்ராவிடம் சுகாதாரத் துறை செயலர் எடுத்துரைத்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் உள்ளிட்ட இதர அமைச்சகங்கள் மேற்கொண்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பிகே மிஸ்ரா ஆய்வு மேற்கொண்டார். மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சகங்களின் ஒத்துழைப்போடு சுகாதாரத் துறை நிலைமையை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு இருப்பதாக பிரதமருக்கான முதன்மைச் செயலரிடம் அலுவலர்கள் உறுதியளித்துள்ளனர்.

இதுவரை 7 சர்வதேச விமான நிலையங்களில் 115 விமானங்களில் பயணித்த 20,000 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT