இந்தியா

பனிமூட்டம் காரணமாக தில்லி செல்லும் 21 ரயில்கள் தாமதமாகின

25th Jan 2020 10:51 AM

ADVERTISEMENT

 

வட இந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான மூடுபனி காரணமாக தில்லிக்கு புறப்படும் 21 ரயில்கள் பல மணி நேரம் தாமதமாக வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடக்கு ரயில்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, பூரி-புது தில்லி பூரிஷோத்தம் எக்ஸ்பிரஸ் மற்றும் ஆனந்த் விஹார் சத்பவானா எக்ஸ்பிரஸ் ஆகியவை 6 மணி நேரம் தாமதமாக வந்தன, அதன்பிறகு வாரணாசி-புது தில்லி காஷி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ் 3 மணி 30 நிமிடங்கள் தாமதமாக வந்தது.

கயா-புது தில்லி மகாபோதி எக்ஸ்பிரஸ் மற்றும் அலகாபாத்-புது தில்லி பத்மாவத் எக்ஸ்பிரஸ் 2 மணி 30 நிமிடங்கள் தாமதமாக வந்தன. அகமதாபாத்-புது தில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ், ஹவுரா-புது தில்லி பூர்வா எக்ஸ்பிரஸ், அகமதாபாத்-டெல்லி ஆசிரம எக்ஸ்பிரஸ், விசாகப்பட்டினம்-புது தில்லி ஏபி எக்ஸ்பிரஸ் பல மணி நேரம் தாமதமானது.

ADVERTISEMENT

வெள்ளிக்கிழமை, வட இந்தியாவின் பல பகுதிகளில் மூடுபனி காரணமாக 12 ரயில்கள் தாமதமாக வந்தன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT