இந்தியா

நாடாளுமன்ற கேன்டீன் விரைவில் முழு சைவமாக மாற வாய்ப்பு?

14th Jan 2020 06:19 PM

ADVERTISEMENT


புது தில்லி: நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கான கேன்டீன் இனி முழு சைவமாக மாற வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற கேன்டீனில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு மத்திய அரசு மானியம் அளிப்பதால், அவற்றின் விலைகள் மிகவும் மலிவாக இருப்பது பலரும் அறிந்த செய்திதான். சமீபத்தில் அவற்றின் விலைகள் மாற்றியமைக்கப்பட்டன.

தற்போது நாடாளுமன்ற கேன்டீனில் உணவுப் பொருட்களை தயாரித்து வழங்கும் பணியை இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி மேற்கொண்டு வருகிறது. விரைவில் இந்த ஒப்பந்தம் முடிந்து, தனியார் நிறுவனங்களுக்கு இந்த ஒப்பந்தம் கைமாற வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில், பிகார்நெர்வாலா அல்லது ஹால்திராம் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற கேன்டீன் ஒப்பந்தம் வழங்கப்படும் என்றும் உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.

ADVERTISEMENT

ஒரு வேளை பிகார்நெர்வாலா அல்லது ஹால்திராம் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற கேன்டீன் ஒப்பந்தம் வழங்கப்பட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் மெனுவிலும் மாற்றம் ஏற்படலாம்.

ஏன் என்றால், இவ்விரு நிறுவனங்களுமே சைவ உணவுகளை மட்டும் தயாரிப்பவை. எனவே, நாடாளுமன்ற கேன்டீன் விரைவில் முழு சைவமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT