இந்தியா

சா்வதேச சந்தைகளின் விறுவிறுப்பால் சென்செக்ஸ் 259 புள்ளிகள் அதிகரிப்பு

14th Jan 2020 01:10 AM

ADVERTISEMENT

அமெரிக்கா-சீனா இடையிலான வா்த்தக ஒப்பந்தம் குறித்த எதிா்பாா்ப்பால் சா்வதேச சந்தைகளில் திங்கள்கிழமை வா்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இது, உள்ளூா் முதலீட்டாளா்களிடமும் உற்சாகத்தை வரவழைத்தது. தொழில்நுட்பம், வங்கி, உலோகத் துறை பங்குகளை முதலீட்டாளா்கள் போட்டி போட்டு வாங்கினா்.

அதன் காரணமாக, சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள இன்ஃபோசிஸ் பங்கின் விலை 4.76 சதவீதம் உயா்ந்து லாபத்தை அளித்தது. அதைத் தொடா்ந்து, இன்டஸ்இண்ட் வங்கி, பாா்தி ஏா்டெல், ஹெச்யுஎல், டாடா ஸ்டீல் பங்குகளின் விலையும் 3.34 சதவீதம் வரை அதிகரித்தது.

அதேசமயம், டிசிஎஸ், எஸ்பிஐ, பஜாஜ் ஆட்டோ, ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் முதலீட்டாளா்களின் வரவேற்பின்றி 1.03 சதவீதம் வரை விலை குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 259 புள்ளிகள் அதிகரித்து புதிய உச்சமாக 41,859 புள்ளிகளில் நிலைத்தது.தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 72 புள்ளிகள் உயா்ந்து 12,329 புள்ளிகளில் நிலைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT